முதல்வர் கவலைக்கிடம்: இன்று மாலை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

சென்னை,

திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை 6 மணி கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இதில் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் தேர்வு செய்யப்படலாம் என தெரிகிறது.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததை தொடர்ந்து, அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் உடடினயாக சென்னைக்கு வருமாறு நேற்று அதிமுக தலைமை அறிவுறுத்தியது.

aiadmk-leaders2aiadmk-leaders2

இதைத்தொடர்ந்து இன்று காலை 11 மணி அளவில் அப்பல்லோ வளாகத்தில் கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டதாவும், ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கையெழுத்து பெறப்பட்டதாகவும் கூறப்பட்டது.

அதைத்தொடர்ந்து, அதிமுக எம்எல்ஏக்களின் அதிகாரப்பூர்வ கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள  கட்சி தலைமையாகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் தேர்ந்து எடுக்கப்படலாம் என தெரிகிறது.