ஜெ. மரணம்: லண்டன் டாக்டர் பீலேவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

சென்னை:

றைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் பீலே விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளது.

உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுங்கு இங்கிலாந்தில் இருந்து வந்த சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் பீலே சிகிச்சை அளித்தார். அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்  இதுவரை 100க்கும் மேற்பட்டோரிம் விசாரணை நடத்தி உள்ளது. ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலா உறவினர்கள், அப்பல்லோ மருத்துவர்கள் உள்பட ஏராளமானோரிடம் விசாரணை நடத்தி உள்ளது. தற்போது விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது.

இந்த நிலையில், ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அவருக்கு சிகிச்சை அளித்த  இங்கிலாந்து மருத்துவர் ரிச்சர்ட் பீலே வரும் ஜனவரி 9ம் தேதி ஆஜராகுமாறு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

அன்றைய தினம் காணொலி காட்சி மூலம் ரிச்சர்ட் பீலேவிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

ரிச்சர்ட் பீலே  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் எந்த மர்மமும் இல்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி