ஜெயலலிதா மரணம் : ஆறுமுகசாமி ஆணையம் அப்பல்லோவில் நேரில் ஆய்வு

சென்னை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் அப்பல்லோ மருத்துவமனையில் வரும் 29ஆம் தேதி நேரில் ஆய்வு செய்ய உள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைந்துள்ள ஒரு நபர் ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.   இதுவரை 30 க்கும் மேற்பட்டோர் ஆணயத்தில் சாட்சி அளித்துள்ளனர்.   அதில் சசிகலாவுக்கு எதிராக சாட்சி அளித்தவர்களிடம் அவர் வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

வரும் 29 ஆம் தேதி ஆறுமுகசாமி  ஆணையம் அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளது அன்று இரவு 7 மணி முதல் சுமார் 45 நிமிடங்கள் இந்த ஆய்வு நடைபெற உள்ளது.    அபோது ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறை மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து ஆணயம் ஆய்வு நடத்தும்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கி இருந்த அறைகளையும் ஆய்வு செய்யப்பட உள்ளது.  இந்த ஆய்வை சென்ற மாதம் 15ஆம் தேதி விசாரணை ஆணயம் நடத்த இருந்தது.   ஆனால் அப்போது இந்த ஆய்வுக்கு மருத்துவமனை மறுப்பு தெரிவித்ததால் ஆய்வு நிறுத்தப்பட்டது.