Random image

அப்போலோ நிர்வாகத்துக்கு ஜெ.மரண விசாரணை ஆணையம் எச்சரிச்கை

ப்போலோ மருத்துவர்கள் உரிய நேரத்தில் ஆஜராகவில்லை என்றால் மருத்துவமனை நிர்வாகம் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று ஆறுமுகசாமி ஆணையம் அப்போலோ நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சம்மன் அனுப்பி அப்போலோ மருத்துவர்களை ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் சில மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆணையத்தில் குறித்த நேரத்தில் ஆஜராகவில்லை.

இதையடுத்து குறிப்பிட்ட நேரத்தில் அப்போலோ மருத்துவர்கள் கண்டிப்பாக  ஆஜராக வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டிக்கு அனுப்பியுள்ள இந்த நோட்டீஸில், ஜெயலலிதாவின் சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனை பல கோடி ரூபாய் பெற்றுள்ளது என்றும், விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆறுமுகசாமி

இந்த நடவடிக்கை அப்போலோ இயக்குனர்களுக்கும் பொருந்தும் என்றும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போலோ நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன், அப்போலோ தலைமை பிசியோதெரபிஸ்ட் ராஜ் பிரசன்னா உள்ளிட்ட மருத்துவர்கள் வரும் தினம்களில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியிருக்கிறது.