காவிரி தொடர்பாக ஜெ., அப்பலோவில் ஆலோசனை நடத்தினார்…..ராமமோகன ராவ்

சென்னை:

ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ், ஆணையம் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ காவிரி விவகாரம் தொடர்பாக 2016ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது ஆலசோனை நடத்தினார்.

இந்த ஆலோசனை 2 மணிநேரம் மருத்துவமனையில் நடந்தது. சசிகலா தரப்பு வக்கீல்களின் குறுக்கு விசாரணைக்கு பதிலதிளித்தேன்’’என்று தெரிவித்தார்.