சென்னை,

மிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து ஒரு வருடம் ஆகிறது. வரும் டிசம்பர் 5ந்தேதி முதலாண்டு நினைவு நாள் அதிமுக சார்பில் அனுசரிக்கப்படுகிறது.

இந்த நினைவு நாள் நிகழ்ச்சியின்போது இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் மவுன ஊர்வலம் மற்றும் மலர் அஞ்சலி  நடைபெறும் என அதிமுக தலைமை கழகம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு நாளான டிசம்பர் 5-ந்தேதி அமைதி ஊர்வலம், நினைவு அஞ்சலி, கழக உடன் பிறப்புகள் உறுதிமொழி ஏற்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

அண்ணா சாலையில் அண்ணாசிலை அருகே கழக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நினைவு நாள் அமைதி ஊர்வலம் காலை 9.30 மணிக்கு புறப்பட்டு ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்பார்கள்.

நிகழ்ச்சிகளில் தலைமைக் நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூராட்சி, வட்ட, கிளை, வார்டு நிர்வாகிகள், அமைச்சர் பெருமக்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதி களும், உடன்பிறப்புகளும், பொது மக்களும் பெருந்திரளாக பங்கு பெறுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது