சென்னை,

டெங்கு உள்ளிட்ட நோய்களைப் பரப்பும் கொசு மற்றும் இதர பூச்சியினங்களை ஒழிக்க மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் பாதிக்கும் மேல் ஜெயலலிதா அரசு செலவிடவில்லை என்ற தகவலை சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம் குற்றமாட்டியுள்ளது.

இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் ,இன்று (13.10.2017)சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பின் போது விடுத்த ஊடக செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:

“இந்தியாவிலேயே மக்கள் சுகாதாரத்துக்காக குறைவான நிதி ஒதுக்கப்படுவது இந்தியாவில்தான். இந்த குறைவான நிதியும் முறையாக செலவிடப்படுவது இல்லை.

உதாரணத்திற்கு 2011-12 ல் கொசு உள்ளிட்ட பூச்சிகளால் பரவும் நோய்களை கட்டுப்படுத்த மத்திய அரசு தமிழகத்திற்கு  ரூபாய் 7.64 கோடியை ஒதுக்கியது.

ஆனால் தமிழக அரசு அதில் வெறும் 3.41 கோடியை மட்டும் தான் செலவு செய்தது.

அதே 2011 ல் தமிழகத்தில் 2501 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர்,9 பேர் இறந்தனர்.22171 பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டனர்.

இதேபோல, 2012-13 ல் ரூ 9.08 கோடி மத்திய அரசால் ஒதுக்கப்பட்டது அதில் தமிழக அரசு 1.26 கோடியை மட்டும் தான் செலவு செய்தது. அதே 2012 ல் தமிழகத்தில் 9249 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர், 60 பேர் இறந்தனர். சிக்குன்குனியாவால் 5018பேரும், மலேரியாவால் 18869 பேரும் பாதிக்கப்பட்டனர்.

அரசின் மெத்தனப்போக்கே இந்நிலைக்குக் காரணம்.அப்பொழுது, நிதியை முறையாக செலவு செய்து கொசுக்களைக் கட்டுப் படுத்தியிருந்தால் இன்று டெங்கு இவ்வளவு அதிகமாக பரவி இருக்காது” என்றுடாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.