ஜெயலலிதா நலம்!: மருத்துவமனை அறிக்கை!

சென்னை:

ஜெயலலிதா நலமுடன் இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்துவரும் சென்னை அப்பல்லோ மருத்துவமனை அறிவித்துள்ளது.

j

தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிலநாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவரது உடல் நலம் குறித்து நாளுக்கு நாள் ஒவ்வொரு வதந்திதகள் பரவியபடி  இருக்கிறது.

இதை தடுக்கும்விதத்தில் ன நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் அறிவித்தனர். ஆனாலும் நேற்று இரவில் இருந்து மீண்டும் ஜெயலலிதா உடல் நலம் பற்றிய வதந்தி வைரலாக பரவியது. இந்த நிலைியல், நேற்று இரவு பத்து மணிக்கு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், “ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளது” என்று அறிவித்தது.