ஜெயலலிதா கால்களை வெட்டி….: பொன்னையன் சொல்வது உண்மயைா?

 

நெட்டிசன்:

Thanjai rajesh  அவர்களது முகநூல் பதிவு:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கால்களை வெட்டி எடுத்து போயஸ் தோட்டத்தின் பாதாள அறையில் இருந்த பல ஆயிரம் கோடி ரூபாய், பணம் நகைகளை சசிகலா குடும்பத்தினர் கொள்ளையடித்தனர் என்று தகவல்கள் பரவி வருவதாக ஓபிஎஸ் அணியின் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

மிஸ்டர் பொன்னையன்!

அப்படியே கட்டுக்கட்டாக பல ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பாதாள அறையில் இருந்தது என்றே வைத்துக்கொள்வோம்.  அவை பழைய ₹500,₹1000 நோட்டுகளாகத்தான் இருந்திருக்கும்.

செப்22 முதல் டிச5 வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஜெவினால், நவ8 ந்தேதி செல்லாததாக அறிவிக்கப்பட்ட பழைய 500₹,1000₹ நோட்டுகளை எப்படி புதிய நோட்டுகளாக மாற்றி வைத்திருக்க முடியும்?

அல்லது பழைய நோட்டுகளை சசி-தினகரன் கும்பல் வெளிநாட்டுக்கு எடுத்து சென்றதா?

அந்த நேரத்தில் நாடுமுழுவதும் இருந்த அலர்ட் விபரமறிந்த அனைவருக்குமே தெரியும்.. அத்தனை கண்காணிப்புகளை தாண்டி எப்படி கடல் மார்க்கமாக போயிருக்க முடியும்?

அப்படியே போயிருந்தாலும் அவை வெற்று காகிதங்களாக தான் ஆகியிருக்குமே தவிர.. பணமாக மதிப்பை பெற்றிருக்க முடியாது…

சும்மா உளறாதீங்க மிஸ்டர் பொன்னையன்..!

 

கார்ட்டூன் கேலரி