இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் ஜெயலலிதா

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்றிருக்கிறது அ.தி.மு.கழகம். இதையடுத்து அக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, இன்று மாலை 4 மணிக்கு ஆளுனர் ரோசய்யாவை சந்தித்து, ஆட்சி அமைக்க மீண்டும் உரிமைகோருகிறார். மேலும், புதிய அமைச்சரவை பட்டியலையும் ஆளுநரிடம் அளிக்க இருக்கிறார்.
நாளை சென்னை பல்கலைக் கழக அரங்கில் பதவியேற்பு நிகழ்ச்சி நடக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.