51கோடி ரூபாய் செலவில் ஜெ. நினைவு மண்டபம்: இபிஎஸ்,ஓபிஎஸ் அடிக்கல் நாட்டினர்

சென்னை:

றைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்ட இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. அதிகாலையிலேயே அதற்கான பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்ற நிலையில் காலை 9 மணிக்கு மேல் அடிக்கல் நாட்டப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்திலேயே  சமாதி அமைக்கப்பட்டுள்ளது.

ரூ.50 கோடியே 80 லட்சம் செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் சிறந்த கலைநயத்துடன் கூடிய வடிவமைப்புடன்  நவீன வேலைப்பாடுடன் கூடிய நினைவு மண்டபம் கட்ட தமிழக அரசு முடிவு செய்து அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

இநத விழாவுக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினர்.

இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 51கோடி ரூபாய் செலவில் ஜெ. நினைவு மண்டபம்: இபிஎஸ், Jayalalitha Memorial Hall at Rs 51 crores: EPS and OPS laying stoned, ஓபிஎஸ் அடிக்கல் நாட்டினர்
-=-