ஜெ. மரணம்: விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர், செவிலியர் ஆஜர்

சென்னை:

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை  ஆணையத்தில் அப்பலோ மருத்துவர் பத்மாவும், செவிலியர் மகேஸ்வரி இன்று ஆஜராகி உள்ளனர்.

நேற்று அப்பல்லோ மருத்துவர் ஷில்பா மற்றும் செவிலியர் ஹெலனா ஆகியோர் ஆஜனார்கள். இந்த நிலையில், இன்று மற்றொரு மருத்துவரும், செவிலியரும் ஆஜராகி உள்ளனர்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் ஓய்வுபெற்ற  நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் பலரிடம்  விசாரணையும், குறுக்கு விசாரணையும் நடத்தி உள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக அப்பல்லோ மருத்துவர்கள் விசாரணைக்கு ஆஜராகி வருகிறார்கள்.

நேற்று நடைபெற்ற விசாரணையில், 2016ம் ஆண்டு  டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் மருத்துவ மனையில் ஜெயலலிதாவுக்கு  வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டிருந்ததால் ஜெயலலிதா உணவு உட்கொள்ளவில்லை என கூறியதாக தகவல் வெளியானது.

ஆனால், ஏற்கெனவே ஆஜரான சில மருத்துவர்கள் 4ம் தேதி மதியம் அவர் சாப்பாடு சாப்பிட்ட தாக தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக யார் சொல்வது உண்மை என்பதில் விசாரணை ஆணையம் குழம்பிபோய் உள்ளது.

அதுபோல, அப்போது நடைபெற்ற இடைத்தேர்தலின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் ஜெ. சிகிச்சையின்போதே இனிப்பு சாப்பிட்டார் என்றும் கூறப்பட்டது. அதுகுறித்தும் அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் ஆணையம் விசாரித்து வருகிறது.