ஜெ. மரணம்: விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் சாந்தாராம் ஆஜர்

நீரழிவு நோய் மருத்துவர் சாந்தாராம்

சென்னை:

றைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், அப்பல்லோ மருத்துவர் சாந்தாராம் இன்று நேரில் ஆஜர் ஆகி விளக்கம் அளித்தார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஏற்கனவே 35க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ள நிலையில், ஜெ.வுக்கு சிறுநீரக நோய்க்கும் சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவர் சாந்தா ராமுக்கு சம்மன் அனுப்பியிருந்தது.

அதன்படி இன்று காலை  மருத்துவர் சாந்தா ராம், சென்னை எழிலகத்தில் உள்ள  ஆறுமுகசாமி தலைமை யிலான விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அவரிட்ம் விசாரணை நடைபெற்றது.