ஜெ.மரணம்: சசிகலா சகோதரர் திவாகரனுக்கு விசாரணை ஆணையம் சம்மன்

சென்னை:

ஜெ. மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை அணையம், சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு  மே 3ந்தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளது.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், ஏற்கனவே சசிகலாவின் உறவினர்கள் பலரிடம் விசாரணை நடத்தி உள்ளது. மேலும் பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், இன்றைய விசாரணைக்கு, தமிழக அரசின் முன்னாள் சிறப்புச் செயலாளர் சாந்தா ஷீலா நாயர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி கிளை மேலாளர் லீலா செல்வக்குமாரி, சசிகலா வின் உதவியாளர் கார்த்திகேயன் உள்பட பலரிடம் விசாரணை நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சர் ஆனூர் ஜெகதீசன், தாமாக முன்வந்து விசாரணைக்கு ஆஜரானார்.

இந்த நிலையில், சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு, ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மே 3 ஆம் தேதி விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.