ஜெ. மர்ம மரணம் சர்ச்சை: சிபிஐ விசாரணை! ஸ்டாலின் வலியுறுத்தல்

--

சென்னை,

ஜெ. மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை என்று தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருன மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டிசம்பர் 5ந்தேதி மரணம் அடைந்தார்.

அவர் அப்பல்லோவில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு ஒரு வருடம் முடிந்துள்ள நிலையில், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து தமிழக அமைச்சர்களே பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனோ, மருத்துவமனையில் நாங்கள் யாரும் ஜெ.வை பார்க்க வில்லை. நாங்கள் சொன்னதெல்லாம் பொய் என்று தற்போது மன்னிப்பு கோருகிறார்.

அதேவேளையில், ஜெ.மருத்துவமனையில் இருந்தபோது, அவர் சிகிச்சை பெற்று வரும் புகைப்படங்களோ, வீடியோவோ வெளியிட அனைத்து தரப்பிரும் வலியுறுத்தியபோது, அப்படி எதுவும் எடுக்கப்படவில்லை.. கிடையாது என்று சசிகலா தரப்பினரும் அறிவித்திருந்தனர்.

ஆனால், தற்போது ஜெ. சிகிச்சை குறித்த சிசிடிவி காட்சிகள் இருப்பதாகவும், அதே நேரத்தில் கடைசி இரண்டு மாதம் சசிகலா கூட ஜெ.வை பார்க்கவில்லை என்று டிடிவி தினகரன் கூறி மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளார்.

இந்நிலையில், தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், தனது டுவிட்டர் பக்கத்தில் ஜெ. மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை என்று வலியுறுத்தி உள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

 ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை யாரும் பார்க்கவில்லையென அமைச்சர் சீனிவாசன் கூறியுள்ளார் என ஸ்டாலின் கூறியுள்ளார். 3 தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் பி பார்மில் ஜெயலலிதா கையெழுத்து போட்டதும், கை ரேகை வைத்ததும் எப்படி.. உடனே சிபிஐ விசாரணை தேவை என்று வலியுறுத்தி உள்ளார்.