ஜெ. மரணம்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீண்டும் ஆஜராக உத்தரவு


சென்னை:

ஜெ.மரணம் தொடர்பாகஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆயையத்தில் இன்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில்,  மீண்டும் வரும் செவ்வாய்க்கிழமை  விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டு உள்ளது.

முன்னாள் தமிழக முதல்வரான ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசா ரணை கமிஷனில்  தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆஜரானார்.

அவரிடம் விசாரணை ஆணைய நீதிபதி ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

மேலும், ஜெயலிதாவை அப்பல்லோவில்  சந்தித்தீர்களா என்றும், ஏன் வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவில்லை, அவர் நலமோடு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது ஏன் என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்

அதற்கு பதில் அளித்த ராதாகிருஷ்ணன், அதற்குரிய ஆவணங்களையும் தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. சுமார்  4 மணி நேரம் விசாரணை நடத்தியது.

இன்றைய விசாரணையை தொடர்ந்து வரும் 18ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு ஆஜராக ஆணையம் கூறி உள்ளது.

அன்றைய தினம்   தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆகியோர் ஆஜராகவும்  சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதேபோல் 19 ம் தேதி எய்மஸ் மருத்துவர்களுக்கும்,  20 ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் விசாரணைக்கு நேரில்  ஆஜராகுமாறு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி