சென்னை:

ஜெ.மரணம் தொடர்பாக விசாரணை செய்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் அதிமுக முன்னாள் எம்.பி.மனோஜ் பாண்டியன் ஆஜரானார்.

விசாரணை முடிந்ததும், அவரை மீண்டும் மார்ச் மாதம் ஆஜராக சம்மன் கொடுக்கப்பட்டது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுவரை ஜெ. மரணம் தொடர்பாக மருத்துவர்கள், சசிகலா உறவினர்கள், ஜெ. உதவியாளர்கள், முன்னாள் தலைமை செயலாளர்கள், பொதுமக்கள் உள்பட பலரிடம் விசாரணை நடைபெற்றுள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளரான அதிமுக முன்ன்ள் எம்.பி. மனோஜ் பாண்டியனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்படி மனோஜ்பாண்டியன்  இன்று ஆஜரானார். விசாரணை முடிந்ததும், செய்தியாளர்களை சந்தித்த அவர்,  ஜெயலலிதா மரணம் தொடர்பாக எனக்கு தெரிந்த விவரங்கள் மற்றும் மருத்துவமனையில் பார்த்ததை அப்படியே கூறினேன்  என்ற அவர், சசிகலா மீது ஜெ.கொண்டிருந்த சந்தேகம் குறித்தும் தெரிவித்தேன் என்றார்.

அதைத்தொடர்ந்து தனக்கு மார்ச் 2வது வாரத்தில் மீண்டும் ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன் கொடுத்துள்ளதாகவும் கூறினார்.

ஏற்கனவே சசிகலா குறித்து கடந்த ஆண்டு பி.எச்.பாண்டியன் மற்றும் மனோஜ் பாண்டியன் கூறிய குற்றச்சாட்டு பற்றிய செய்தி முழு விவரத்திற்கு கீழே உள்ள லிங்கை கிளிக்கவும்

https://patrikai.com/jayalalithaa-pushed-down-p-h-pandian-allegation-to-sasikala/