Random image

ஜெ.மரணம்: எச்சரிக்கையை தொடர்ந்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர்கள் ஆஜர்

சென்னை:

றைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும்  ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், நீதிபதி எச்சரிக்கையை தொடர்ந்து  அப்பல்லோ மருத்துவ மனையின் பிசியோதெரபிஸ்ட் மற்றும் இதய நோய் சிறப்பு மருத்துவர் உள்பட 3 பேர் இன்று ஆஜரானார்கள். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

அப்பல்லோவில் சுமார் 75 நாட்களாக சிகிச்சை பெற்ற தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நலமுடன் இருக்கிறார் என்று மருத்துவமனை வட்டாரம்  கூறி வந்த நிலையில், திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து தமிழக அரசு ஜெ. மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையத்தை ஏற்படுத்தியது. ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம் ஏற்கனவே 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்திய நிலையில், அப்பல்லோ மருத்துவர்கள் 6 பேர் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்ததாக கூறப்பட்து.

அதைத்தொடர்ந்து விசாரணை ஆணை  நீதிபதி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்  எச்சரிக்கை விடுத்த நிலையில்,  ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனையின் இதய நோய் சிறப்பு மருத்துவர் சாய் சதீஷ், பிசியோதெரபிஸ்ட் ராஜ்பிரசன்னா ஆகியோர் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகினர். அவர்களிடம், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதேபோல், ஜெயலலிதாவின் தனிச் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமலிங்கமும் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். அவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.