சென்னை:

றைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்து வரும் நீதிபதி ஆறுமுக சாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில்,சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தி வந்த நிலையில், வழக்கில் மீண்டும் ஆஜராக பலருக்கு  ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

வரும் 16ம் தேதி கிருஷ்ணபிரியா, விவேக் உள்பட பருக்கு விசாரணை ஆணையம் சம்மன்  அனுப்பி உள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், சசிகலா உறவினரும், சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா கடந்த ஜனவரி 2ந்தேதி  ஆஜரான நிலையில் மீண்டும் அவர் ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

அத்துடன் ஜெயா டிவி சிஇஒ விவேக், மருத்துவர் சுதா சேஷையன், சுவாமி நாதன், அப்பல்லோ மருத்துவர் சத்ய பாமா, வெங்கட்ராமன், போயஸ்தோட்ட சமையல்காரம்மாள் ராஜம்மாள் ஆகியோர் 16ந்தேதி ஆஜராகும்படியும், 17ந்தேதி ஐஏஎஸ் அதிகாரி ராமலிங்கம் மற்றும் ஜெ.உதவியாளர் பூங்குன்றன் ஆகியோர் ஆஜராகவும் சம்மன் அனுப்பி உள்ளது.