ஜெ.மரணம்: விசாரணை ஆணையத்தில் ஜெயா டிவி விவேக் ஆஜர்

சென்னை:

ஜெ.மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெயா  டிவி சிஇஒ விவேக் ஜெயராமன் இன்று ஆஜர் ஆனார்.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி  விசாரணை கமிஷன் முன்பு இன்று, சசிகலாவின் உறவினரும், தற்போது, சொத்து குவிப்பு வழக்கு காரணமாக  பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளவருமான   இளவரசியின் மகன் விவேக ஜெயராமன் ஆஜராகியுள்ளார்.

கடந்த 9ந்தேதி விவேக் ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பிய நிலையில், இன்று விவேக் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்.

ஜெயா டிவியின் தற்போதைய சிஇஓவாக இருக்கும்,  விவேக் ஜெயராமன், சிறுவயது முதல் ஜெ.வின் போயஸ்தோட்ட இல்லத்திலேயே வளர்ந்தவர் என்றும், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது உடனிருந்து கவனித்துக்கொண்டவர் என்றும் கூறப்படுகிறது.

அவரிடம்  ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வேறு வீடியோக்கள் உள்ளனவா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.