ஜெ. மரணம்: விசாரணை ஆணையத்தில் ஜெ., சசி உதவியாளர்கள் மீண்டும் ஆஜர்

சென்னை:

றைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில   ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சசிகலா உதவியாளர் கார்த்திகேயன் ஆகியோர் இன்று மீண்டும் ஆஜர் ஆனார்கள்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் ஓய்வுபெற்ற  நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் இதுவரை 40க்கும் மேற்பட்டோரிடம் விசாரணையும், குறுக்கு விசாரணையும் நடைபெற்று நிலையில், இன்றைய விசாரணைக்கு  ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சசிகலா உதவியாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் ஆஜரானார்கள்.

ஏற்கனவே இவர்கள் ஆஜரான நிலையில் இன்றைய விசாரணைக்கு ஆணையம் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து  இன்றும் ஆஜரானார்கள்.

அதுபோல கொடநாடு எஸ்டேட்டின் வங்கிக் கணக்கு வைக்கப்பட்டிருந்த  கோத்தகிரி பாங்க் ஆப் இந்தியா மேலாளரான அலோக் குமாரும் ஆணையத்தில் ஆஜராகியுள்ளார்.