சென்னை,

றைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் முன்பு இன்று ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆஜரானார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்தது. இந்த விசாரணை ஆணையம் ஜெ. மரணம் தொடர்பாக பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது.

இதுவரை 17 பேரிடம் விசாரணை நடத்தி உள்ள நிலையில், நேற்று ஜெயலிதாவின் பிரத்யேக மருத்துவர் சிவக்குமார் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். விசாரணையின்போது,  ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக சில ஆதாரங்களை அளித்துளளதாகவும், மீண்டும் வரும் 22ம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஆணையம் உத்தரவிட்டு உள்ளது என்றும் கூறினார்.

அதைத்தொடர்ந்து, இன்று விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆஜரானார். அவருடன் விசாரணை ஆணைய நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார்.

நாளை  (10-ந்தேதி) ஜெயலலிதா பாதுகாப்பாளராக இருந்த பெருமாள்சாமி  ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.