சென்னை,

மிழக முன்னாள் முதல்வர் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று ஜெயலலிதாவின் ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். இன்று ஆஜராக உள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் ஆணையத்தை நியமித்தது. கடந்த நவம்பரில் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையை தொடங்கினார்.

ஜெயலலிதா மரணம் குறித்து இதுவரை ஒன்பதுக்கும் மேற்பட்டவர்கள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். மேலும்,  முப்பதுக்கும்  அதிகமானவர்கள் புகார் அளித்துள்ளனர்.

மேலும், காவல்துறையில் பதிவுசெய்யப்பட்ட ஜெயலலிதா மரணம் தொடர்பான 302 புகார்கள் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இவை தவிர தபால் மூலம் மேலும் 120 புகார்கள் குவிந்துள்ளன.

மேலும் ஜெயலலிதாவின்   அண்ணன் மகள் ஜெ.தீபா, அவரது கணவர் மாதவன் உள்ளிட்டோர் ஆஜரானார்கள்.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். இன்று ஆஜராக உள்ளார்.