ஜெ. மரணம் மர்மம்: அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன்!

சென்னை,

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுக சாமி தலைமையிலான விசாரணை ஆணையம், இரண்டு அரசு மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணையை தொடங்கி உள்ள நீதிபதி ஆறுமுகசாமி, இரண்டு அரசு மருத்துவர்கள் நாளை விசாரணை ஆணையத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி யுள்ளது.

சென்னை எழிலகக் கட்டடத்தின் கலசமஹாலில் அமைந்துள்ள விசாரணை ஆணையம்  இன்று முறைப்படி தனது விசாரணையைத் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து விசாரணை ஆணைய நீதிபதி ஆறுமுகசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்கு நாளை ஆஜராகுமாறு இரு அரசு மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பபட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் ஆஜராகி பிரமாணப் பாத்திரங்களை தாக்கல் செய்யலாம்.

மரணம் தொடர்பாக யாராக இருந்தாலும் அவர்களிடம் விசாரணை நடத்தப்படும். உண்மையை முழுமையாக வெளிக்கொணர்வதே ஆணையத்தின் நோக்கமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.