ஜெ. மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர்கள் 2 பேர் ஆஜர்

சென்னை:

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் ஒய்வுபெற்ற  நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று அப்பல்லோ மருத்துவர்கள் 2 பேர் ஆஜராகியுள்ளனர்.

நேற்றும்  அப்பல்லோ மருத்துவர்களான அருள்செல்வன், ரவிக்குமார் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது, ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் மற்றும் நரம்பு தொடர்பான சிகிச்சை அளித்ததாக தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையைச் சேர்ந்த மயக்க மருந்து வல்லுநரான டாக்டர் பாஸ்கர் மற்றும் டாக்டர் செந்தில் குமார் ஆகியோர் ஆறுமுகசாமி ஆணையம் முன் ஆஜராகியுள்ளனர். அவர்களிடம் ஜெயலலிதா சிகிச்சை உள்ளிட்ட விவரங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் ஓய்வுபெற்ற  நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் பலரிடம்  விசாரணையும், குறுக்கு விசாரணையும் நடத்தி உள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக அப்பல்லோ மருத்துவர்கள் விசாரணைக்கு ஆஜராகி வருகிறார்கள்.

அதையடுத்து, வரும்  23, 24  ஆகிய தேதிகளில் எய்ம்ஸ் மருத்துவர்கள், ஜி.சி கில்னானி, அஞ்சன் டிரிக்கா, நிதீஸ்நாயக் ஆகியோர் ஆஜராக சம்மன் அனுப்பப் பட்டுள்ளது. அவர்கள் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து, வரும்  24-ம் அப்போலோ மருத்துவமனை தலைமைச் செயல்பாட்டு அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் ஆஜராகவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.