சென்னை:

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடத்தி வரும் விசாரணை ஆணையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 100க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தி உள்ள நிலையில், இறுதியாக துணைமுதல்வர் ஒபிஎஸ்சை விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆணையம் பல முறை சம்மன் அனுப்பியிருந்தது.

ஜெ. மரணம் குறித்து தமிக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன், மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை ஆகியோர் ஆணையத்தில் ஆஜ ராகி வாக்குமூலம் அளித்தனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 29-ம் தேதி ஆணையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. அதைத் தொடர்ந்து பிப். 5-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் ஆஜராக நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டார்.

ஏறகெனவே  4 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஓபிஎஸ், இந்த முறை ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆணைய விசாரணைக்கு துணை முதல்வர் ஆஜராக இருப்பதால், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு காவல்துறையிடம் ஆணையம் சார்பில் கேட்கப்பட்டுள்ளது.