ஜெ.வின் அண்ணன் மகள் தீபா, கூட்டத்தோடு கூட்டமாக கண்ணீர் மல்க அஞ்சலி!

img-20161206-wa0042

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர், லட்ச கணக்கான பொது மக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பலரும், எதிர்பார்த்த ஜெயலலிதாவின் உடன் பிறந்த அண்ணன் ஜெயராமனின் மகள் தீபா, மக்களுடன் மக்களாக வரிசையில் நின்று தனது அத்தையின் உடலை காண மணிகணக்கில் காத்திருந்தார்.. அவர் அஞ்சலி செலுத்த எந்தவித சிறப்பு ஏற்பாடும் செய்யப்படவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தி சென்ற பிறகேு தீபா விற்கு அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டது. பொது மக்கள் வரிசையில் வந்த தீபா ஒரு சில நொடிகள் மட்டுமே அஞ்சலி செலுத்தி விட்டு உடனடியாக திரும்பினார். அப்போது அவர் கதறியபடியே சென்றார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, அப்பல்லோ மருத்துவமனைக்குள் இவர் அனுமதிக்கப்படவில்லை என்பதும், வாசலியே நின்று கண்ணீர் விட்டு திரும்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது