சென்னை:
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த, 74 நாட்களாக, சிகிச்சை பெற்று வரும், முதல்வர் ஜெயலலிதா வுக்கு,நேற்று மாலை, 6:00 மணி அளவில், ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து, அவரது உடல்நிலை தொடர்பாக, அதிர்ச்சிகரமான வதந்திகள் பரவின. உடன், தமிழக அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்தனர்.
மருத்துவமனை வளாகம் முன்பு, அ.தி.மு.க. தொண்டர்கள் பெருமளவில் கூடினர். பலர் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தனர்.  அப்பல்லோ; மருத்துவமனை வாயில் மூடப்பட்டது. தொண்டர்கள், போலீஸ் மோதலில் லேசான தடியடி நடத்தப்பட்டது.
தமிழக காவல்துறை டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன், சென்னை கமிஷனர், ஜார்ஜ், கூடுதல் கமிஷனர்கள் சங்கர், ஸ்ரீதர், இணை கமிஷனர் மனோகரன் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகளும் மருத்துவ மனைக்கு வந்தனர்.
இதற்கிடையில், அப்பல்லோ மருத்துவ மனைக்கு, புதிதாக சிகிச்சை பெற வந்த எவரையும் அனுமதிக்கவில்லை., இரவு, 9:25 மணி அளவில், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை தொடர்பாக, அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
appllojeya
அதில், முதல்வருக்கு மாலையில் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில், சிகிச்சை அளிக்கப்படு தாகவும், இதயநோய் மற்றும் நுரையீரல் நோய் சிகிச்சை நிபுணர்கள் அவரின் உடல் நிலையை கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முதல்வருக்கு, ‘பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தப்படலாம், எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன
.இதுதொடர்பாக, அப்பல்லோ மருத்துவ குழுமத்தின் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில்,’மருத்துவர்கள் தங்களால் இயன்றவரை சிகிச்சை அளித்து விட்டனர். இனி, கடவுளை வேண்டி கொள்வது தான் ஒரே வழி’ என, கூறிவிட்டதாக தகவல் பரவியது.
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வருகை யைத் தொடர்ந்து, தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவும், நேற்று நள்ளிரவு மும்பையிலிருந்து அவசரமாக சென்னை புறப்பட்டு, அப்பல்லோ மருத்துவ மனைக்கு வந்தார்.
தி.மு.க., பொருளாளர், ஸ்டாலின், துாத்துக்குடியில், நடக்கும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் யில்பங்கேற்க சென்றிருந்தார். அவர் தனது பயணத்தை ரத்து செய்து விட்டு, நேற்றிரவு அவசரமாக சென்னை திரும்பினார்
தமிழகம் முழுவதும், அனைத்து காவல் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டன; போலீசார் அனைவரும், இன்று காலை ஏழு மணிக்கு சீருடையுடன் காவல் நிலையம் வர வேண்டும் என உத்தரவிடப்பட்டது..
அப்பல்லோ மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் உள்ளிட்ட பெண் ஊழியர்கள், உடனடியாக வீடு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்கள், பின்வாசல் வழியாக, வெளியேறினர்.
.
மருத்துவமனைக்கு வரும் வாகனங்களை தவிர, வேறு வாகனங்களுக்கு அந்த பகுதியில் தடை விதிக்கப்பட்டது.
சென்னையில் உள்ள உயர் போலீஸ் அதிகாரி ஒருவரின் மகனுக்கு, நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதில் பங்கேற்காமல், அவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்தார்.
*காங்கிரஸ் துணை தலைவர், ராகுலுக்கு, ஜெ. உடல் ந லம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அவர், சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைவர், திருநாவுக்கரசரிடம், முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
சென்னையில் உள்ள அமெரிக்க துணை துாதரகத்திற்கு, முழு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
தி.மு.க. தலைவர்களின் இல்லங்கள், தி.மு.க. அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டது.
கடைகளை இன்று திறக்க வேண்டாம்’ என, வணிகர் சங்கங்களுக்கு, போலீசார் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் பரவியது.
நேற்று நள்ளிரவு சென்னையில் பெரும்பாலான பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டன.
முதல்வர் ஜெ., உடல்நிலை குறித்து, கவர்னர் வித்யாசாகர் ராவிடம், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விசாரித்தார்.
ஜெ. உடல் நலம் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அனைவரும் இன்று காலை 11 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு வரவேண்டும் என உத்தரவிடப்பட்டது.