ஜெ.வின் போயஸ் நினைவு இல்லம்: இன்று மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம்

சென்னை:

றைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இடத்தை தமிழக அரசு, நினைவு இல்லமாக மாற்றுவதாக அறிவித்தது. இந்த நிலையில், ஜெ.வின் போயஸ் நினைவு இல்லம் நினைவு இல்லாமாக மாற்றுவது குறித்து மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் இன்று நடைபெறுகிறது.

இன்று காலை 11 மணி முதல் மாலை வரை சென்னை   தேனாம்பேட்டை சமூக நல கூடத்தில்  மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மக்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.

அதைத் தொடர்ந்து 2வது கூட்டம் நாளை மறுநாள் 11 ம் தேதி நடை பெற உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம்,  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  ஜெயலலிதா மரணத் திற்கு நீதி விசாரணை நடத்தப்படும் என்றும், ஜெ. வாழ்ந்த அவரது போயஸ் கார்டன் இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்றும்  அறிவித்திருந்தார். இதையடுத்து போயஸ் இல்லத் துக்கு உரிமைக்கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் தீபா சார்பில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், போயஸ்தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் இன்று நடைபெறுகிறது.