ஜெயலலிதா பூரண குணமடைந்தார்! அப்பல்லோ பிரதாப்ரெட்டி

சென்னை,

முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்துவிட்டார் என்று அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்து உள்ளார்.

இன்று சென்னை பெருங்குடியில் நடைபெற்ற உறுப்பு தானம் செய்வர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி இவ்வாறு கூறினார்.

jeya-prathab-reddy

தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணம் அடைந்து விட்டார். தற்போது அவருக்கு முழு உடல் பிசியோ தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் வீடு திரும்புவார் என்று கூறினார்.

கடந்த செப்டம்பர் மாதம் 22ந்தேதி இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலமில்லாமல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட  தமிழக முதல்வர் ஜெயலலிதா இரண்டு மாத்திற்கும் மேலாக மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த வாரம் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்ட ஜெயலலிதா தற்போது பிசியோதெரபி சிகிச்சை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.