தஞ்சையில் திடுமென இரவோடு இரவாக நிறுவப்பட்ட ஜெயலலிதா சிலை!  

ஞ்சையில் அனுமதி இன்றி இரவோடு இரவாக ஜெயலலிதாவின் சிலை நிறுவப்பட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது.

தஞ்சை ரயில் நிலைய பகுதியில் எம்.ஜி.ஆர். சிலை இருக்கிறது. எட்டடி பீடத்தில் எட்டடி உயரமுள்ள இந்த சிலையை தஞ்சையில் எட்டாவது உலகத்தமிழ் மாநாடு நடந்தபோது அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.

ரயில் நிலைய விரிவாக்கப்பணிக்காக சிலையை அகற்ற வேண்டும் என்று நீண்டகாலமாக ரயில்வே துறை தெரிவித்து வருகிறது. இதை எதிர்த்து பலமுறை உள்ளூர் அதிமுகவினர் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் எம்.ஜி.ஆர் சிலை அருகே அதே போல எட்டடி பீடத்தில் எட்டடி உயர ஜெயலலிதா சிலை இரவோடு இரவாக நிறுவப்பட்டுள்ளது. இன்று காலை அந்த வழியில் சென்ற மக்கள் புதிய சிலையைப் பார்த்து அதிர்ந்தனர்.

இது குறித்து உள்ளூர் அ.தி.மு.க. பிரமுகர்களிடம் கேட்டபோது, தங்களுக்கு ஏதும் தகவல் தெரியாது என்றனர். காவல்துறை தரப்பில் விசாரித்தபோது அவர்களும் தங்களுக்கு ஏதும் தகவல் தெரியாது என்றனர்.

சிலை அமைக்க வேண்டுமென்றால் உள்ளாட்சி அமைப்பிடம் முறைப்படி மனு செய்து அனுமதி பெற வேண்டும். ஆனால் எந்தவித அனுமதியும் இன்றி இந்த சிலை வைக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அ.தி.மு.க. பிரமுகர்களே, சிலை வைக்கப்பட்டது குறித்து தங்களுக்குத் தெரியாது என்று கூறுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Jayalalitha statue without permission thanjavur suddenly  midnight, தஞ்சை  இரவு நிறுவப்பட்டது ஜெயலலிதா சிலை திடீரென
-=-