சென்னை,

ஜெயலலிதா சிகிச்சை பெறுவதாக டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல் இன்று காலை வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நாளை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இந்த வீடியோ வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் கமிஷன் இந்த வீடியோ வெளியிட அனைத்து ஊடகங்களுக்கும் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த டிடிவி ஆதரவாளரான தங்கத் தமிழ்செல்வன், ஜெ.சிகிச்சை குறித்த வீடியோ வெளியிட்டதில் எந்த தேர்தல் விதிமீறலும் இல்லை, இதன் காரணமாக எந்தவித  நடவடிக்கையையும் சந்திக்க தயாராக இருப்பதாக கூறி உள்ளார்.

மேலும், அம்மா இறந்ததா சொன்னீங்களே… தற்போது இதற்கு பதில் சொல்லுங்கள் என்ற தங்க தமிழ்செல்வன், உண்மையை சொன்னா குத்தம் சொல்வீங்களா என்று கேள்வி எழுப்பியவர்,  துரோக கும்பலான ஒபிஎஸ் இபிஎஸ்க்கு பாடம் கற்பிக்கவே வீடியோவை வெளியிட்டுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் தேர்தல் வேட்புமனு தாக்கலின்போது தங்களுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்தாகவும், ஒரு சுயேட்சையை எதிர்க்க பயந்துகொண்டு ரூ. 150 கோடி செலவு செய்துள்ளனர் எனவும் குற்றம் சாட்டினார்.

நேற்று ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் ஜெ. மரணத்திற்கு சசிகலா குடும்பம்தான் காரணம் என்று பிட் நோட்டீஸ் விநியோகித்ததாகவும், அதற்கு பதில் அளிக்கவே இன்று வீடியோ வெளியானது என்றும்,  இதன்  ஒபிஎஸ் இபிஎஸ்  பொய் பிரச்சாரத்திற்கு முடிவு கட்டியுள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.

இன்று வெளியான வீடியோவை பார்த்து தான் கண்ணீர் விட்டதாகவும், இந்த வீடியோவை கோடிக்கணக்கான மக்கள் சந்தோசமடைந்து உள்ளதாகவும் அவர் கூறினார்.

வீடியோ வெளியாது தேர்தல் விதிமீறல் என்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, இதற்கும் தேர்தலுக்கும் என்ன தொடர்பு என்று கேள்வி எழுப்பிய அவர், இந்த வீடியோ வெளியிட்டதில் எந்த தேர்தல் விதிமீறலும் இல்லை என்றும், இதன் காரணமாக எந்தவித  நடவடிக்கையையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் கூறி உள்ளார்.