தீர்ப்பு: ஜெயலிலதா சொத்துக்கள் பறிமுதல்

டில்லி:

சொத்துக்குவிப்பு வழக்கில்  குற்றவாளிகளான ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வரில், ஜெயலிலதா மரணமடைந்துவிட்டதால், தண்டனையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
இது குறித்து சட்டவல்லுனர்களிடம் கேட்டபோது, “ஏற்கெனவே கர்நாடகா தனி நீதிமன்றத்தில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை அப்படியே உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதன்படி ஜெயலலிதாவும் குற்றவாளிதான்.  அவர் இறந்துவிட்டதால் சிறை தண்டனை நீக்கப்பட்டுள்ளது. அதே நேரம், ஏற்கெனவே அவருக்கு விதிக்கப்பட்ட   100 கோடி ரூபாய் அபராதம்  உண்டு. தற்போது அவர் இறந்துவிட்டதால்,  அவரது சொத்துக்களில் இருந்து 100 கோடி பெருமானமுள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்” என்று தெரிவித்தனர்.