ஜெயலலிதா பற்றிய திரைப்படம்:  இயக்குநருக்கு கொலை மிரட்டல்கள்!


மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கவிருக்கும் திரைப்ட இயக்குநருக்கு,தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

’மெயின் ஹூன் ரஜினிகாந்த்’ என்ற சர்ச்சைக்குரிய படத்தை இயக்கி பிரபலமானவர் பைசல் சைஃப். தற்போது இவர், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தமிழ்,ஹிந்தி,கன்னடா ஆகிய மொழிகளில் திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

.’அம்மா ‘ என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில்,ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கன்னட நடிகை ராகினி திவேதி நடிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஃபைசல்

இந்த நிலையில் ஜெயலலிதா குறித்து திரைப்படம் எடுத்தால் கொலை செய்துவிடுவதாக, தனக்கு அடிக்கடி மிரட்டல்கள் வருவதாக  பைசல் சைஃப் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ” இந்த படத்துடன் ஜெயலலிதாவுக்கு தொடர்பிருக்கும் ஒரே வார்த்தை படத்தின் டைட்டிலான ‘அம்மா’ என்பது மட்டுமே. அதற்கே இத்தனை கொலை மிரட்டல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

என்னுடைய திரைப்படத்தை பார்த்துவிட்டு விமர்சிக்கலாம். ஆனால் அதற்கு முன்பே, கொலை மிரட்டல்கள் விடுவது என்ன நியாயம்?

இந்த கொலை மிரட்டல்களால்  மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன்., இந்த படத்தை எடுக்க முடியுமா என்பதே இப்போது சந்தேகமாக இருக்கிறது” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் பைசல்.

கார்ட்டூன் கேலரி