ஜெ. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்!: மாலினி பார்த்தசாரதி

சென்னை:

ருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வரின் உடல் நலம் மிகவும் தேறியிருப்பதாக, இந்து நாளேட்டின் முன்னாள் ஆசிரியர் மாலினி பார்த்தசாரதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

images

முதல்வர் ஜெயலலிதா கடந்த 12 நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதலில் ஜெயலலிதாவுக்கு நீர்ச்சத்து குறைபாடு என கூறிய மருத்துவமனை நிர்வாகம் பின்னர் நோய்தொற்று இருப்பதாக தெரிவித்தது. பிறகு லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.  தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவனை மருத்துவர்கள் தற்போது சிகிச்சையில் பங்காற்றுகிறார்கள்.

மாலினி பார்த்தசாரதி
மாலினி பார்த்தசாரதி

இந்த நிலையில் முதல்வரின் உடல் நலம் பற்றி விரும்பத்தகாத வதந்திகள் பரவி வந்தன. இதற்கிடையே, இந்து நாளேட்டின் முன்னாள் ஆசிரியர் மாலினி பார்த்தசாரதி கடந்த 3ம் தேதி, தமது ட்விட்டர் பக்கத்தில் “மகிழ்ச்சியான செய்தி… முதல்வர் ஜெயலலிதா நலமுடன் தேறிவருகிறார்… அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவமனையில் ஜெயலலிதாவை நேரில் பார்வையிட்ட அவருக்கு நெருக்கமான நபர் தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டிருந்தார்.

அந்த பதிவில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு. ஜெயலலிதாவின் நீண்டகால தனிப்பட்ட நண்பர்தாம் என்பதால் இந்த மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்து கொள்வதாகவும் மாலினி பார்த்தசாரதி தெரிவித்திருந்தார்.

1

இந்த நிலையில் மாலினி பார்த்தசாரதி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில்,

“டிரக்கியோஸ்டோமி சிகிச்சைக்குப் பின்பு ஜெயலலிதா உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இனி செயற்கை சுவாசம் தேவையில்லை. இது மிக நல்ல அறிகுறி ஆகும்!” என்று பதிவிட்டுள்ளார்.

ஆகவே முதல்வரின் உடல் நலம் சீரான வேகத்தில் தேறவருகிறது என்பது தெரியவருகிறது.