ஜெயலலிதா உடல் நிலை மிகக் கவலைக்கிடம்!

சென்னை,

முதல்வர் ஜெயலலிதா குறித்து அப்பல்லோ  மருத்துவனை வெளியிட்டுள்ள தற்போதைய அறிக்கையில், உடல் நிலை மிகக் கவலைக்கிடமாக இருப்பதாக (வெரி கிரிட்டிகல்) தெரிவித்துள்ளது.

appollo-letter

கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து அங்கே சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது உடல் நிலை குறித்து அவ்வப்போது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கைகள் வெளியிட்டு வருகிறது. நேற்று இரவு முதல்வர் இருதயத்தில் இரண்டு அடைப்பு ஏற்பட்டதாகவும் உடடினயாக சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தமிழகம் முழுதும் பதட்மான சூழல்நிலவுகிறது. இந்த  பரபரப்பான சூழ்நிலையில் அப்பல்லோ நிர்வாகம் இரண்டாவது அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அதில்,  நேற்று இரவு முதல்வருக்கு கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டதாகவும், அதற்கான ECMO சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாவும், அவரது உடல்நிலை மருத்துவர்களால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டு உள்ளது. மேலும் முதன் முறையாக “மிகக் கவலைக்கிடமாக (வெரி கிரிட்டிகல்) இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

j