சென்னை,
ரிலையன்ஸ் குரூப் தலைவர் நீதா அம்பானி, தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பற்றி அறிந்துகொள்ள நேற்று திடீரென அப்பல்லோ மருத்துவமனை வந்தார்.
பிரபல ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி நேற்று திடீரென அப்பல்லோ வருகை புரிந்தார். அங்கு சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின், உடல்நலன் குறித்து மருத்துவ குழுவினர்களிடம் நலம் விசாரித்தார்.
netha
முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி முதல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உடல் நலம் குறித்து பல்வேறு தரப்பினரும் அப்பல்லோ வந்து விசாரித்து செல்கின்றனர்.
தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைத்துறையினர் உள்ளிட்டோர் அப்போலோ வந்து விசாரித்துவிட்டு செல்கின்றனர்.
மேலும், டெல்லியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி திடீரென்று சென்னை வந்து ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரித்துக் சென்றார். அதையடுத்து மத்தியஅமைச்சர் அருண்ஜேட்லி, பாரதிய ஜனதா அகில இந்திய தலைவர் அமித்ஷா ஆகியோர் முதல்வர் நலம் விசாரித்து சென்றனர்.
இந்நிலையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி சென்னை வந்தார். முதல்வர் சிகிச்சை பெற்று வரும் ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார்.
நேற்று மாலை 6.45 மணிக்கு மருத்துவமனைக்குள் சென்ற அவர், முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.