சென்னை:
முதல்வருக்கு இருதயத்தை செயல்பட வைக்க,  செயற்கை தூண்டுதல் கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை மாரடைப்பு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.  அதைத்தொடர்ந்து அவருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டது. தற்போது அவரது இருதயத்தை செயல்பட வைக்கும் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த 12 மணிநேரம், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறப்படுகிறது.
jeya-emco
அவருக்கு தற்போது ( Extracorporeal Membrane Oxygenation (ECMO) என்ற உபகரணம் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது இதயத்தில் ரத்த ஓட்டத்தை சரியான வகையில் செலுத்தி, இதயத்தை செயற்கையாக செயல்பட வைக்கும் ஒரு கருவியாகும்.
இந்த கருவி, இதயம் மற்றும் மூச்சு சீராக இருப்பதை உறுதி செய்யும். சிபிஆர் எனப்படும் உயர்வகை இதய சிகிச்சை உபகரணம் உண்டு.
இந்த கருவியும் பலனிக்காதபோதே ஈசிஎம்ஓ கருவி பொருத்தப்படும்.
தற்போது முதல்வர் ஜெயலலிதாவின் இருதயம் ECMO என்ற கருவி மூலம்தான் இயங்கி வருவ தாக கூறப்படுகிறது. அவரது உடலில்  இந்த கருவி  பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவியின் செயல்பாட்டால், ஆக்சிஜன் ரத்தநாளங்களில் தூண்டுதலை ஏற்படுத்தி அதை உந்திதள்ளும். ஆக்சிஜனை சேர்த்து, கார்பன் டை ஆச்சைடாக  வெளியேற்றும்.
இதன் காரணமாக இருதயம் மற்றும் நுரையீரலுக்கு ரத்த ஓட்டம் சீராக இருப்பதையும் இந்த கருவி கண்காணித்து உறுதி செய்யும்.
இதன் காரணமாக  அடுத்த 12 மணிநேரம் கழித்துதான் முதல்வர் உடல்நிலை குறித்த நம்பகமான தகவல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.