வரலாறு முக்கியம் அமைச்சரே..
a
 
1984 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்,  அ.இ.அண்ணா திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான ‘ அண்ணா ‘ நாளிதழில் வந்த தலைப்பு செய்தியில் இருந்து…
சென்னையில் நடைபெற்ற  அ.தி.மு.கழக  பொதுக்குழுவில்  எம்.ஜி.ஆர். பேசியதாவது :
” கொள்கை பரப்புச் செயலாளர்  பதவியில் இருந்து  ராஜினாமா செய்துள்ள ஜெயலலிதாவின்
ராஜினாமாவை பொதுச்செயலாளர் ப.உ.ச.  அவர்களிடம் சொல்லி ஏற்றுக்கொண்டதாக அறிவித்து இருக்கலாம் . ஆனால்   பொதுக்குழுவில்
அவருடைய கடிதத்தை வைத்து ஏற்றுக்  கொள்வதுதான் நலம் என்று காலம் தாழ்த்தினேன்.  இந்த
விலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்ளுமாறு உங்கள்
அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
சிலஉறுப்பினர்கள்  ” மறுபரிசீலனை செய்யக் கூடாதா ? ” என்று கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த எம்.ஜி.ஆர்., “மறுபரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடமில்லை.     வயதுக்கும் தகுதிக்கும் மீறிய பொறுப்பில்  அந்த  அம்மையாரை உட்கார வைத்தது என்னுடைய தவறு . அவரை நம்பி நாம் இந்த இயக்கத்தை
ஆரம்பிக்கவில்லை. 1977 , 80 தேர்தல்களில் கழகம் வென்றபோது இந்தஅம்மையார் நம்முடன் இல்லை .
என்னைக் கேட்காமலேயே என் பெயரிலேயே அறிக்கை விடுவது , குறிப்பாக ஆந்திராவில் திரு. என்.டி.ஆர் அவர்களின் ஆட்சி கலைக்கப்பட்டது குறித்து அறிக்கை விட்டதும் கண்டிக்கத்தக்கது .
இவைகள் எதுவுமே கட்சியையோ , என்னையோ கலந்துபேசி தெரிவித்த கருத்துக்கள் இல்லை .  இப்படி பலமுறை எனக்குத் தெரியாமல் , எனது பெயரை தவறாகப் பயன்படுத்துவதை இனியும்
என்னால் தாங்கிக்கொள்ள முடியாது .
ஜெயலலிதா வேறு கட்சிக்குப் போவதற்கான வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறார் . அந்த
அம்மையாரைப் பிடித்து காரியங்கள் செய்து கொள்ளலாம் என்று நம்புபவர்கள் , அந்த அம்மையார் பின்னே போவதைப்பற்றி எனக்குக்
கவலை இல்லை.”
இவ்வாறு எம்ஜி.ஆர். பேசி  முடித்தவுடன் ,  பொதுக்குழுவில் இருந்த  1300 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ‘ புரட்சித்தலைவர் வாழ்க ! ‘ என்று முழக்கமிட்டு, ஜெயலலிதா நீக்கப்பட்டதை
ஏகமனதாக ஏற்றுக் கொண்டார்கள் .
அண்ணா இதழில் வெளியான செய்தி…
a
 
 
b
 

தகவல் நன்றி: Chandran Veerasamy