ஜெயலலிதா நினைவிடம் கட்ட தடை கோரிய வழக்கு தள்ளுபடி! சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு

சென்னை:

றைந்த  தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவிடம் அமைப்ப தற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால், தமிழக முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா விற்கு நினைவிடம்  கட்டக்கூடாது என்றும், மெரினாவில் கட்டப்பட்டு வரும் நினைவிடத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ஏற்கனவே விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.

அப்போது, சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்புக்கு முன்பே ஜெயலலிதா இறந்ததால் தண்டனை அளிக்கப்பட வில்லை என்பதை நினைவுகூர்ந்த நீதிமன்றம், அதன் காரணமாக ஜெயலலிதாவை தண்டிக்கப்பட்ட குற்றவாளி என கருத முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்வதாக கூறி உள்ளது.

எம்.எல்.ரவி என்பவர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டக்கூடாது என்றும், அவர் சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என்றும்  வழக்கு தொடர்ந்திருந்தார்..

இந்த வழக்கில்,  சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் ஜெ.க்கு நினைவிடம் கட்டப்பட்டு வருவதாக தமிழக  சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணி அளவில் தீர்ப்பு வழங்கப்பட்டது.