ஜெயலலிதா நினைவிடம் மார்ச்சில் திறப்பு: உயர்நீதி மன்றத்தில் தமிழகஅரசு தகவல்

சென்னை:

றைந்த  தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினை விடம் அமைப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நினைவிடம் திறக்க இருப்பதாக தமிழக அரசு உயர்நீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது.

ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தடை விதிக்க கோரி ரவி என்பவர்  வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் ஜெ.க்கு நினைவிடம் கட்டப்பட்டு வருவதாகவும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஜெ. நினைவிடம் திறக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மிழக முதல்வர் ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மரண மடைந்தார். அதன் பின் அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. ரூ.50.08 கோடி செலவில் அவருக்கு அங்கு நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி , எம்.ஜி.ஆர்.சமாதி அமைந்துள்ள வளாகத்திலேயே ஜெயலலிதாவுக்கு  நினைவு மண்டபம் கட்ட கடந்த மே மாதம் 7ந்தேதி அதிகாலை யாகசாலை பூஜையுடன் அடிக்கல் நாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து நினைவிடம் கட்டும்பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட டிராபிக் ராமசாமி வழக்கு உள்பட 5 வழக்குகள், கருணாநிதிக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பான வழக்கில் வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.