ஜெ., குறித்து பேஸ்புக்கில் வதந்தி பரப்பிய இருவர் பேர் கைது..! சிறையில் அடைப்பு..!

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து பேஸ்புக் உள்ளிட்டசமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

j

நாமக்கலைச் சேர்ந்த சதிஷ்குமார், மதுரையை சேர்ந்த மாடசாமி ஆகியோர், சமூகவலைதளங்களில் ஜெ. குறித்து வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்டனர்.  இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டநர்.

மேலும், இதுவரை 43 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.