சென்னை:

திமுக தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் உருவச்சிலை திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்  70வது பிறந்தநாள் வரும் 24-ம் தேதி அதிமுக சார்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அவருடைய முழு உருவச்சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்கனவே உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே ஜெயலிதாவின் முழு உருவச்சிலையும் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த சிலை திறப்பு விழா 24ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அதுபோல அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான,  ‘நமது அம்மா’ என்ற பெயரில் புதிய  நாளிதழும் தொடங்கப்படுவதாக  அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  ‘அ.தி.மு.க நிரந்தர பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் அரும்பணியாற்றிய ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளான 24-ந் தேதி காலை 10.30 மணிக்கு கட்சி அலுவலக வளாகத்தில் எம்.ஜி.ஆருடைய உருவச்சிலை அருகே, ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலச்சிலையை அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் திறந்துவைக்க உள்ளனர்.

அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க அதிகாரபூர்வ நாளேடு, ‘நமது அம்மா’ பத்திரிகையை அறிமுகம்செய்து, தொடங்கிவைக்க உள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது.