அடியாட்களை அழைத்துப் போய் ஜெயலலிதாவை காப்பாற்றினேன்: திருநாவுக்கரசர்

1

“அடியாட்களை அழைத்துப் போய் ஜெயலலிதாவை காப்பாற்றினேன்.  நான் ல்லையென்றால் ஜெயலலிதாவை ஹைதராபாத்திற்கு பார்சல் செய்து அனுப்பியிருப்பார்கள்” என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

மத்திய மற்றும மாநில அமைச்சராக இருந்தவரும் தற்போது காங்கிரஸ் கட்சி முக்கிய பிரமுகராகவும் உள்ள திருநாவுக்கரசர்,  தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து விராலிமலையில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர், “ஜெயலலிதா மூன்று முறை முதல்வராக இருந்துள்ளார்.  ஆனால்  மக்களை சந்திக்காத முதல்வராகவே இருந்தார், இருக்கிறார்.  அதிக கொள்ளையடித்தவர் அவர்.

கடந்த காலத்தில் நான் இல்லையென்றால் ஜெயலலிதாவை ஹைதராபாத்திற்கு பல பேர் பார்சல் செய்து அனுப்பி வைத்திருப்பார்கள். அப்போது நான் தான் புதுக்கோட்டையில் இருந்து அடியாட்களை கொண்டுபோய் வைத்து அவர் தமிழ்நாட்டு அரசியலில் நீடித்து நிற்க ஏற்பாடு செய்தவன். நியாயமாக பார்த்தால் பன்னீர்செல்வம் முதல்வராக இருந்ததற்கு பதில் நான் தான் முதல்வராக இருந்திருக்க வேண்டும்’’ – இவ்வாறு திருநாவுக்கரசர்  தெரிவித்தார்.