சென்னை,
றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள பகுதி குறித்து பல்வேறு கேள்விகள் எழும்பியுள்ளது. விதிகளை மீறி அவரது உடல் கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே பலவித சர்ச்சைக்கிட மான தகவல்கள் பரவ ஆரம்பித்துவிட்டன.
jeya-samthai1
அவர் மறைந்த பிறகும் இது போன்ற தவகவல்கள் பரவுவது குறையவில்லை.
அதில் ஒன்று.. கடற்கரை அருகில் கட்டிட பணி மேற்கொள்ளக்கூடாது என்றும், குறிப்பாக மெரினா கடற்கரையில் புதிய கட்மாடுனப்பணிகள்  எதுவும் செய்யக்கூடாது என விதிகள் இருக்கின்றன.
இது குறித்து நீதிமன்ற தீர்ப்பு இருக்கிறது. அதை மீறி ஜெயலலிதாவின் உடல் மெரினா கடற்கரை பகுதியில் (எம்.ஜி.ஆர். சமாதி அருகே) எப்படி புதைக்கப்பட்டது” என்பதாகும்.

தேவசகாயம்
தேவசகாயம்

இதுகுறித்து நகர திட்டமிடல் நிபுணரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான எம்.ஜி.தேவசகாயத்திடம் கேட்டபோது, தெளிவாக விளக்கினார்:
““மெரினா கடற்கரையையொட்டி புதிதாக எந்த கட்டிடத்தை கட்டுவது விதிகள் அனுமதிக்காது.
இப்போது எந்த புதிய கட்டிட பணியும் செய்யப்படவில்லை.
ஜெயலலிதாவின் அரசியல் முன்னோடியான எம்.ஜி.ஆரின் நினைவிடத்துக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. அவ்வளவுதான்.
இது சட்டமீறல் ஆகாது” என்றார்.