ஜெயலலிதா மரணம் குறித்தும், அவரது உயில் குறித்து  தகவல் பெரும் உரிமை சட்டத்தின் வாயிலாக வழக்கறிஞர் ஒருவர் கேள்வி எழுப்பி மனு அனுப்பி உள்ளார்.
ஜெயலலிதா, எப்போது உயில் எழுதினார், அவரது உடல் மீது வைக்கப்பட்டு இருந்த தேசிய கொடியை சசிகலா நடராஜன் வாங்கியது சரியா போன்ற கேள்விகளை ஆர்.டி.ஐ மூலம் கேட்டுள்ளார் நெல்லை வழக்கறிஞர் பிரம்மா.
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 5ந்தேதி நள்ளிரவு காலமானார். ஆனால் அவரது மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது.
modi-jaya
கடந்த செப்டம்பர் மாதம் 22ந்தேதி முதல் உடல்நலம் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோவில் அனு மதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, உடல்நலம் தேறி சிறப்பு வார்டுக்கு மாற்றபட்டார். விரைவில் வீடு திரும்புவார் என்று பொதுமக்கள் நினைத்திருந்த வேளையில் கடந்த 4ந்தேதி மாலை அவருக்கு கார்டியாக் அரெஸ்ட் என்று அப்பல்லோ அறிவித்தது.
அதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா மரணத்தை எய்தினார் என்று 5ந்தேதி நள்ளிரவு அப்பல்லோ நிர்வாகம் அறிவித்தது.
இதனைதொடர்ந்து அவரது உடல் போயஸ் கார்டன் உள்ள ஜெயலலிதாவின் வேதா நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவருக்கு ஈமச்சடங்குகள் நடைபெற்றது.
அதன் பின்னர் ஜெ. உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக காலை 6 மணிக்கு ராஜாஜி பவன் கொண்டு செல்லப்பட்டது.
அன்று மாலை 4.30 மணி அளவில் அவரது இறுதி ஊர்வலம் ஆரம்பமானது. அண்ணா சதுக்கத்தில் உள்ள எம்ஜிஆர் சமாதி வளாகத்திலேயே, மாலை 6 மணி அளவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முதல்வராக இருந்த ஜெயலலிதா செப்டம்பர் மாதம் 22ந்தேதி அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து, அவரது மரணம் வரை அவர் குறித்த எந்தவித புகைப்படமோ, மருத்துவமனையில் என்ன நடக்கிறது என்ன விவரமோ வெளியிடப்படவில்லை. அப்பல்லோவில் இருந்து முதல்வர் உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்ற ஒரே அறிவிப்புதான் திரும்ப திரும்ப வெளியிடப்பட்டு வந்தது.
 அதேபோல் அவர் மரணம் அடைந்ததாக சொல்லப்பட்டது முதல், அவரை சுற்றி நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும் பொது மக்களிடையே சந்தேகத்தையே உருவாக்கி உள்ளது. வெளியூர் மற்றும் வெளி நாடுகளில் இருந்து அவரது முகத்தை கடைசியாக  ஒரு முறை பார்த்துவிட வேண்டும் என்று எத்தனையோ பேர் வந்துகொண்டிருந்த நிலையில், அவரது உடல்  ஒரே நாளில் அடக்கம் செய்யப்பட்டது ஏன்? என்று பலவாறாக கேள்விகள் பொதுமக்களிடம் எழுந்த வண்ணம் உள்ளது.
apollo1
இதுகுறித்து நெல்லையை சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா என்பவர் தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் மத்திய பொது தகவல் அலுவலருக்கு விவரம் கேட்டு மனு அனுப்பி உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சராக பதவி வகித்து வந்த ஜெயலலிதா 5.12.2016ல் அப்போலோ மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.
அவரது இறுதி சடங்கு 6.12.2016ல் நடைபெற்றது. அதில் மத்திய அரசு சார்பாக கலந்து கொண்டவர்களின் பெயர், பணி பொறுப்பு விவரம் தர வேண்டும். 
இறுதி சடங்கில் முப்படையினர் மொத்தம் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள். அவர்கள் முப்படையில் என்னென்ன பணி பொறுப்பில் உள்ளார்கள் என்ற விவரம் தர வேண்டும். 
இறுதி சடங்கில் ஜெயலலிதா  உடல் முப்படையினரிடம் எத்தனை மணிக்கு ஒப்படைக்கப்பட்டது. அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட உடலை முப்படையில் பெற்றுக் கொண்ட நபரின் பெயர், பணி பொறுப்பு விவரம் தர வேண்டும். 
இறுதி சடங்கில் ஜெயலலிதா  உடல்மீது போர்த்தப்பட்டிருந்த  இந்திய தேசிய கொடியை எடுத்து சசிகலா நடராஜனிடம் எந்த அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டது என்ற விவரம் தர வேண்டும். 
இறுதி சடங்கில் தேசிய கொடியை பெறுவதற்கு இந்திய அரசியலமைப்பின் சட்டத்தின்படி இறந்தவரின் வாரிசுதாரர்கள் யார் யாரிடம் ஒப்படைக்கலாம்,  எந்த அடிப்படையில் வாரிசுதாரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்ற விவரம் தர வேண்டும். 
இறுதி சடங்கில் தேசிய கொடியை இறந்தவரின் வாரிசுதாரர் அல்லாத மற்றொரு நபரிடம் எந்த விதியின்  அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டது. அதற்கான சட்ட விதிகள் என்ன என்ற விவரம் தர வேண்டும். 
ஜெயலலிதாவின் இறுதி சடங்கு இந்து சமய அடிப்படையில் நடைபெற்றுள்ளது என்றால்,  இந்து வாரிசு உரிமை சட்டப்படி தேசிய கொடியை முப்படை வீரர்களிமிருந்து பெறுவதற்கு சட்ட அதிகாரம் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற விவரம் தர வேண்டும். 
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசு மரியாதை, எந்த  அடிப்படை யில் எந்த சட்டபிரிவின் கீழ் முப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு குண்டுகள் முழங்க இறுதி சடங்கு நடைபெற்றது என்ற விவரம் தர வேண்டும். 
இறுதி சடங்கில் மொத்தம் எத்தனை குண்டுகள் முழங்கப்பட்டது என்ற விவரம் தர வேண்டும். 
முதல்வர் பதவியிலிருந்த காரணத்தினால் ஜெயலலிதாவுக்கு அரசு மரியாதையும், குண்டு முழக்கமும் மற்றும் அவரது பூத உடலை ராணுவ வாகனத்தில் ஏற்றி  இறுதி ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது  எந்த சட்டப்பிரிவின் கீழ் நடைமுறைபடுத்தப்படுகிறது என்ற விவரம் தர வேண்டும். 
jeya-good-pdhoto1
ஜெயலலிதாவுக்கு இறுதி சடங்கு நடைபெறுவதற்கு முன்பு எத்தனை நாட்களுக்கு முன்பு அல்லது எத்தனை மணி நேரத்திற்கு முன்பு ஜெயலலிதா முதல்வர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்ற விவரம் தர வேண்டும்.
இறுதி சடங்கு ஜெயலலிதாவுக்கு நடைபெற்றது போல தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு எந்தெந்த முன்னாள் முதல்வர்களுக்கெல்லாம் அரசு மரியாதையுடன் நடைபெற்றுள்ளது என்று விவரம் தர வேண்டும். 
ஜெயலலிதாவுக்கு  அரசு மரியாதை கேட்டு விண்ணப்பம் செய்ய வேண்டுமெனில்,  விண்ணப்பம் செய்த  நபரின் பெயர், முகவரி தர வேண்டும். மேலும் விண்ணப்பம் செய்யும் தகுதி யார், யாருக்கெல்லாம் உள்ளது என்ற விவரம் தர வேண்டும். 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எழுதிய உயிலின் நகல் தர வேண்டும்.
உயிலானது எந்த தேதியில் எழுதப்பட்டது எந்த தேதியில் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது என்ற விவரம் தர வேண்டும்.
அரசிடம் கொடுக்கப்பட்ட உயிலினை பெற்றுக் கொண்ட அதிகாரியின் பெயர், பணி பொறுப்பு மற்றும் உயிலை பெற்றுக் கொண்டமைக்கு பதிவேட்டில் பதிவு செய்யயப்பட்டு வழங்கப்பட்ட எண் விவரம் தர வேண்டும்.
தமிழக முதலமைச்சராக பன்னீர் செல்வம் எந்த தேதியில் முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டார். பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்ட நேரம், நாள் விவரம் தர வேண்டும். 
முதலமைச்சராக பன்னீர் செல்வம் பதவி ஏற்றபொழுது அவருடன் மொத்தம் எத்தனை அமைச்சர்கள் பதவியேற்றார்கள் என்ற விவரம் தர வேண்டும். அவர்களுக்கு ஆளுநர், பதவி பிரமாணம் எத்தனை மணிக்கு செய்து வைத்தார். எந்த தேதியில் என்ற விவரம் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பணி பொறுப்பு ஏற்று கையொப்பமிட்ட பதிவேட்டின் நகல் தர வேண்டும் 
முதலமைச்சர் பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு எம்.எல்.ஏக்கள் ஒப்புதல் அளித்து கொடுத்த கடித நகல் தர வேண்டும். 
முதலமைச்சராக பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு என்ன பொறுப்பு வைத்திருந்தார் என்ற விவரம் தர வேண்டும். சட்டமன்ற உறுப்பினர் தவிர வேறு என்னென்ன பொறுப்புகளிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார் என்ற விவரம் தர வேண்டும். 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தார் என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக அரசு எத்தனை மணிக்கு வெளியிட்டது என்ற விவரம் தர வேண்டும். 
முன்னாள் முதல்வர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காலத்தில் எந்தெந்த தேதிகளில் ஆளுநர் நேரில் சென்று பார்வை யிட்டார் என்ற விவரம் தர வேண்டும் 
முன்னாள் முதல்வர் சிகிச்சை பெற்ற மருத்துவமனையின் மருத்துவர்கள் முன்னாள் முதல்வர் உடல்நலம் குறித்து எழுத்துப்பூர்வமாக ஆளுநரிடம் கொடுத்த நகல் தர வேண்டும். 
தமிழக அரசின் முதல்வராக பொறுப்பு வகித்து இறந்த பின்னர், மரபுபடி தற்காலிக முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவது தமிழ்நாட்டின் நடைமுறையில் இருந்துள்ளது.
ஆனால் இப்போது மட்டும் மரணமடைவதற்கு முன்பு முதல்வராக பன்னீர் செல்வம் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்  எனில் முன்னாள் முதல் வருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடத்துவதற்கு எந்த வகையில் சட்டத்தின் வழியில் அனுமதிக்கப்பட்டது என்ற விவரம் தர வேண்டும். 
apollo
முன்னாள் முதல்வர் நல்லடக்கம் செய்யப்பட்ட இடமானது யாருக்கு சொந்தமான இடம் என்ற விவரம் தர வேண்டும்.
இடமானது அரசின் பராமரிப்பிலும் அரசுக்கு சொந்தமாகவும் உள்ளது எனில் அந்த இடத்தில் தமிழக முன்னாள் முதல்வர்களை நல்லடக்கம் செய்ததற்கு வழங்கப்பட்ட அனுமதி கடித நகல் தர வேண்டும். 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் எந்த தேதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என்ற விவரம் தர வேண்டும். 
அவரது சிகிச்சைக்கு செலுத்தப்பட்ட கட்டணம், என்னென்ன வகைக்கெல்லாம் கொடுக்கப்பட்டது. மருத்துவருக்கு கொடுக்கப்பட்ட கட்டணம். அப்போலோவில் ரூம் வகைக்கு கொடுக்கப்பட்ட கட்டணம். மருந்து வகைக்கு கொடுக்கப்பட்ட கட்டணம் உட்பட
அனைத்து வகையான கட்டணங்களும் சேர்த்து மொத்தம் எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்ற விவரம் தனித்தனியே வழங்கப்பட்ட தொகை தேதி வாரியாக மற்றும் கொடுக்கப்பட்ட வரைவோலை, காசோலை, பணம் விவரம், வங்கியின் விவரம், காசோலை எண் உட்பட அனைத்து தகவல்களும் தர வேண்டும் 
இவ்வாறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.