ஜெயலலிதாவுக்கு சிகிச்சை:மீண்டும் இன்று மாலை வருகிறார் லண்டன் டாக்டர்!

சென்னை,

மிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க மூன்றாவது முறையாக மீண்டும் இன்று மாலை சென்னை வருகிறார்  லண்டன் டாக்டர் பீலே.

கடந்த 22ந்தேதி இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக  அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அவருக்கு  காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு, டாக்டர் சிவக்குமார் தலைமையிலான அப்பல்லோ மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் உடனடியாக குணப்படுத்தப்பட்டாலும், சளி, மூச்சு திணறல், நீர்ச்சத்து குறைபாடு இருந்ததால், தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியிலேயே தங்கி சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. அவருக்கு ஆன்டிபயாடிக் மருந்து, சுவாச உதவி போன்றவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு சிகிச்சை அளிக்க லண்டன் பிரபல மருத்துவ நிபுணர் ரிச்சர்டு பீலே இரண்டு முறை சென்னை வந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்து சென்றார். தற்போது மூன்றாவது முறையாக அவர் சென்னை வருகிறார்.

richard-beale

சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வுக்கு அப்பல்லோ மருத்துவ குழுவினருடன்  எய்ம்ஸ் டாக்டர்களும் இணைந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தீவிர சிகிச்சை நிபுணர்கள், இதய சிகிச்சை நிபுணர்கள், நுரையீரல் சிகிச்சை நிபுணர்கள், நீரிழிவு நோய் சிகிச்சை நிபுணர்கள் கொண்ட டாக்டர்கள் குழுவினர் முதல்வரின் உடல்நிலையை 24 மணி நேரமும்  கண்காணித்து வருகின்றனர்.

முதல்வரின் உடல்நிலை குறித்து,  அவ்வப்போது அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகமும் அறிக்கை மூலம் வெளியிட்டு வருகிறது.

இரண்டு முறை சிகிச்சை அளித்து சென்ற டாக்டர் பீலே இன்று மாலை மீண்டும் சென்னை வருகிறார். நேற்று டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் சென்னை வந்தனர்.  மதியம் 1.30 மணிக்கு வந்த அவர்கள், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை கண்காணித்ததுடன் மேற்கொண்டு சிகிச்சையும் அளித்தனர்.

சுமார்  2 மணி நேரத்துக்கு மேலாக சிகிச்சை அளித்த எய்ம்ஸ் டாக்டர்கள், மதியம் 3.50 மணிக்கு ஆஸ்பத்திரியில் இருந்து காரில் புறப்பட்டு சென்றனர். பின்னர், இரவு 7 மணிக்கு மீண்டும் ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை மேற்கொண்டனர்.

இன்னும் 3 நாட்கள் இவர்கள் சென்னையில் தங்கியிருந்து முதல்வருக்கு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பார்கள் என தெரிகிறது.

இதற்கிடையில் லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே இன்று மாலை மீண்டும் சென்னை வருகிறார். அதன் பிறகு அப்பல்லோ மருத்துவமனை வரும்  அவர், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை கண்காணித்து சிகிச்சை மேற்கொள்வார்.

அவரும் ஒரு சில நாட்கள் சென்னையில் தங்கியிருந்து முதல்வரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிப்பார் சென்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.