அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றவர் ஜெயலலிதா: திமுக எம்.பி. கனிமொழி புகழாரம்

மிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்து 2 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அவரது நினைவை போற்றும் வகையில் திமுக எம்.பி.யும் மகளிர் அணி தலைவியுமான கனிமொழி டிவிட் செய்துள்ளார்.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த2016ம்  வருடம் செப்டம்பர், 22 ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, சுமார் 75 மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென  சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5ம் தேதி இரவு மரணமடைந்தார்.

அவரது மரணம் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் அதுகுறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இன்று ஜெயலலிதாவின் 2வது ஆண்டு நினைவுநாளை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் அவரது படத்துக்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னையில்,   முதலமைச்சர் எட்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர்.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் நினைவை போற்றும் வகையில், திமுக எம்.பி.யான கனிமொழி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், ஒரு பெண்ணாக  இருந்து அரசியலில் வெற்றி பெறுவது எளிதல்ல. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றார். ஆனால், அவரின் இறுதி நாட்களில் அவர் மரணம் தொர்பாக ஏற்பட்ட சர்ச்சைகள் துரதிருஷ்டவசமானது… என்று கூறி உள்ளார்.

 

கார்ட்டூன் கேலரி