லிங்குசாமி இயக்கத்தில் ஜெ., வாழ்க்கை வரலாறு!: திவாகரன் மகன் ஜெயானந்த்  தகவல்

றைந்த முதலமைச்சர் ஜெயல‌லிதாவின் வாழ்க்கை வர‌லாறு லிங்குசாமி இயக்கத்தில் திரைப்படமாக உருவாக இருப்பதாக  திவாகரன் மகன் ஜெயானந்த் தெரிவித்துள்ளார்.

ஜெயானந்த் – திவாகரன் – ஜெயலலிதா

இது குறித்து ஜெயானந்த்  தனது சமூகலவைதள பக்கத்தல் தெரிவித்துள்ளதாவது:

 

“அம்மாவின் வாழ்க்கை வரலாறு தனித்துவம் கொண்ட இயக்குநர் எனது நண்பர் திரு.லிங்குசாமி அவர்களால் படமாக்கப்படும். இதில் நடராஜன் மற்றும் சின்னம்மாவின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். தமிழக அரசியல் தலைவர்களுடன் இயக்குநர் பல செய்திகளின் உண்மைத் தன்மை அறிந்து தகுந்த ஆதாரங்களுடன் இப்படம் எடுக்கப்படும்” என்று ஜெயானந்த் குறிப்பிட்டுள்ளார்.