ஜெ. மரணம்: துணைமுதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் விஜயபாஸ்கர், தம்பித்துரைக்கு ஆணையம் சம்மன்

சென்னை

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், பாராளுமன்ற துணை சபாநாயகரும், அதிமுக எம்.பி.யுமான தம்பித்துரை ஆகியோருக்கு  ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

ஏற்கனவே ஓபிஎஸ், விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பட்ட நிலையில், அவர்கள் அலுவல் காரண மாக கலந்துகொள்ளாததால், மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து  ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. அவர்களிடம் சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தியும் வருகிறார்.

இந்த நிலையில், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் விசாரணைக்கு வர வேண்டும் என ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. ஜனவரி 8ம் தேதி ஆஜராகுமாறு அறிவுறுத்தி உள்ளது.

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஜனவரி 11 ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. மேலும்  சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்  ஜனவரி 7ம் தேதி ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

கார்ட்டூன் கேலரி